Wednesday, 07.03.2024, 4:37 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

S.மேகநாதன் ,M.Com, M.A ASTRO, D.A A.D.A, ASTRO


இராசியை கொண்டு என்ன பலன் கூறலாம் என்று பார்க்கலாம்.
1. பன்னிரு இராசிகளில் கோள்கள் நின்ற பலன் ( உதாரணம் - மேஷ இராசியில் சூரியன் நின்ற பலன்)
2. கோள்களின் பலம் ( அதாவது ஆட்சி, உச்சம், நீசம், நட்பு, சமம், பகை )
3. பாவக அதிபதி
4. பாவக அதிபதி மாறி நின்ற பலன் (உதாரணம் இரண்டுக்கு உடையவன் ஆறில் நின்ற பலன்)
5. அரச யோக பலன்கள் .
6.அனைத்து தோஷங்களும் இராசியை வைத்தே கூறப்படுகிறது.
7.கோள்கள் இணைவு பலன்கள்.
8.ஒரு குறிபிட்ட பாவக காரக கோளின் நிலை. ( உதாரணம் புத்ர காரகன் குரு வின் நிலை)
9.ஜென்ம இராசியை எடுத்துக்கொண்டு, கோச்சார பலன் கூறுவதற்கு.
10.திருமண பொருத்தம் பார்ப்பதற்க்கு. (தோஷ சாம்யம் பார்க்க)
இன்னும் பல பார்த்து கொண்டு வருகிறோம்.....
ஜாதகம் பலன் கூறுவதில் விதி - மதி இரண்டுமே மிக முக்கியம். இவை இருகண்கள் போல. இராசியை வைத்து விதியை கூறலாம், பாவகத்தை வைத்துத்தான் மதியை கூறவேண்டும். அதாவது தசாபுத்தி பலன்கள் கூற பாவகத்தை தான் எடுத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக இராசி கட்டத்தில் 7 இல் உள்ள கோள், பாவக கட்டத்தில் 6 ம் பாவகம் அல்லது 8 ம் பாவகதிற்க்கு  மாற வாய்ப்பு உள்ளது. இதனால் பலன்கள் மொத்தமாக மாறிவிடும். 
எனவே இராசியை வைத்து எதற்கு பலன் கூற வேண்டும், பாவகத்தை கொண்டு எதற்கு பலன் கூறவேண்டும் என்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் கணணி வந்து விட்டதால் பாவக கணிதம் போட எந்த சிரமும் இல்லை என்று ஆகிவிட்டது, இனியாவது தசாபுத்தி பலன்களை பாவகத்தை கொண்டு கூறுவோம்.

செவ்வாய் தோஷம் லக்னத்தில் இருந்து மட்டும் தான் பார்க்க வேண்டும். சந்திரன் மற்றும் சுக்க்ரனில் இருந்து பார்க்க கூடாது 
 செவ்வாய் தோஷதிருக்கு சில விதி விலக்குகளும் காண படுகிறது. அவை:
1.செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம் பெற்று இருந்தால் தோஷமில்லை.
2.செவ்வாயுடன் குரு சேர்ந்தாலும் அல்லது செவ்வாயை குரு பார்த்தாலும் தோஷமில்லை.
3.இரண்டமிடத்து செவ்வாய், மிதுனம் மற்றும் கன்னி ராசியாக இருப்பின் தோஷமில்லை.
4.பனிரெண்டம்மிடத்து செவ்வாய் ரிஷபம் துலாம் ராசியாக இருப்பின் தோஷமில்லை.
5.சிம்மம் மற்றும் கும்ப ராசியில் செவ்வாய் இருப்பின் தோஷமில்லை.
6.செவ்வாய் – சந்திரன்/புதன்/சூரியன்/சனி/ராகு/கேது  ஆகிய 6 கோள்களில் எதேனும் ஒரு கோளுடன் சேர்ந்தாலும் அல்லது இந்த 6 கோள்களில் எதேனும் ஒரு கோளால் பார்கப்பட்டலும் தோஷம் இல்லை.
7.செவ்வாய் தன் மிதிரர்களான சூரியன், சந்திரன், குரு இவர்களின் வீட்டில் இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
8.கடகம் , சிம்மம் லக்னமாகி செவ்வாய் எங்கு இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை.

A) லக்னத்தில் இருந்து 7 மற்றும் 8  ல் இருந்தால் முழு செவ்வாய்.
B) லக்னத்தில் இருந்து 2, 4, 12  ல் பரிகார செவ்வாய்.
C) லக்னத்தில் இருந்து 1,3,5,6,9,10,11 செவ்வாய் இல்லை.
        எப்படி பொருத்த வேண்டும் ஒரே வரியில் கூற வேண்டும் என்றால், ஆண் பெண் இருவரில் ஒருவருக்கு A  இருந்து, மற்ற ஒருவருக்கு C இருந்தால் மட்டுமே பொருந்தாது. மற்றவை பொருத்தலாம் மணமக்களை பாதிக்காது.

சித்திரை மாதம் 21 முதல் வைகாசி மாதம் 14 வரை நடக்கும் இதில் சுபகாரியம் செய்யக்கூடாது.

அக்னி நட்சத்திர காலங்களில்

செய்யக்கூடியவை :

விவாகம், உபநயனம், பிரவேசம், ருதுசாந்தி

செய்யக் கூடாதவை :

கிணறு தோண்டல், விதை விதைத்தல், மரம் நடுதல், குளம் வெட்டல் கூடாது.

ஜென்ம நட்சத்திரம், திதி, கிழமைகளில் செய்யத் தகுந்தவை :-

வித்தை ஆரம்பம், நிலம், சொத்து வாங்குதல், அன்னதானம் வேள்வி, பட்டாபிஷேகம் முதலியன செய்யலாம்.Z

செய்யக்கூடாதவை :

விவாகம், உடலுறவு, சீமந்தம், மருந்து சாப்பிடக் கூடாது. முகச்சவரம், எண்ணை தேய்த்துக் குளித்தல், புத்தாடை அணிதல் கூடாது, பெண்களுக்கு ஜென்ம நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாம். ஆனால், ஜென்ம வாரத்தில் திருமணம் செய்யக்கூடாது.

தோஷமில்லாத காலம் :-

சூரிய உதயத்தில் உஷத் காலத்தில் திதி தோஷமும் அபிஜித் காலத்தில் அதாவது 12 1/2 நாழிகைக்கு மேல் ஒரு நாழிகைக்குள் நட்சத்திர தோஷமும், அஸ்தமன நேரத்தில் லக்ன தோஷமும் இரவில் வார தோஷமும் கிடையாது.

திருமணத்திற்கு பின்பு செய்யக்கூடா தவை :-

ஒருவர் புதிதாக திருமணமாகி ஆறு மாத காலத்துள் பூனூல் போடுவதோ, தீர்த்த யாத்திரை செல்வதோ, புதுவீடு குடிபுகுவதோ முடியெடுத்தலோ கூடாது.

பஞ்ச பட்சிகள் :-

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பட்சி உண்டு. அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், இவை ஐந்திலும் பஞ்சபட்சி வல்லூறு.

திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், மகம், பூரம், இவை ஆறுக்கும் பஞ்ச பட்சி - ஆந்தை

உத்தரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம் இவை ஐந்திற்கும் பஞ்சபட்சி - காகம்.

அனுஷம், கேட்டை, மூலம், பூராடம் உத்ராடம் இவை ஐந்திற்கும் பஞ்சபட்சி - கோழி

திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி இவை ஆறுக்கும் பஞ்சபட்சி - மயில்

படுபட்சி நாட்கள் :

இந்நாட்களில் அவரவருடைய பஞ்சபட்சியானது செயல் இழந்துவிடும். இந்நாட்களில் எந்தவித சுபகாரியம், பிரயாணம், புதிய முயற்சிகள் செய்யக் கூடாது.

விசாகம்

நக்ஷத்திரங்கள் தோஷத்தை உண்டாக்குவதில்லை என்பது உங்களுக்கு தெரியும். ஆகையால் விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவரால் இளைய மைத்துனருக்கு தோஷம் ஏற்படுமா என்று தெரிந்து கொள்ளசம்பந்தப்பட்டவருடைய  ஜாதகத்தைப் பார்க்க வேண்டும்.

லக்கினத்திலிருந்து ஒன்பதாம் வீடு இளைய மைத்துனரை குறிக்கும் இடம். இங்கு ராகு, கேது, அல்லது செவ்வாய் இருந்தால் இளைய மைத்துனருக்கு தோஷம் ஏற்படலாம். இப்படி உள்ள ஜாதகருக்கு இளைய மைத்துனர் இல்லாத இடமாக இருப்பது நல்லது. 9ம் வீட்டில் வேறு கிரகங்கள் இருந்தாலோ, சுத்தமாக இருந்தாலோ தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை. 

விசாக நக்ஷத்திரத்தின் அதிபதி குரு. இவர் புதனுடன் சேர்ந்து இருந்தால் சில இன்னல்கள் ஏற்படலாம். ஆனால் குரு பலமாக இருந்தால் இன்னல்கள் ஏற்படாது.

இதை படித்தபின் விசாக நக்ஷத்தரத்தின் தோஷத்தைப்பற்றி உங்களுக்கு புரிந்திருக்கும். விசாகத்தில் பிறந்த வரனின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். 9ம் வீட்டில் வேறு கிரகங்கள் இருந்தாலோ, சுத்தமாக இருந்தாலோ தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை. விசாகத்தில் பிறந்தவரின் ஜாதகங்களை வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள். உங்கள் ஜோசியரிடம் கேட்டு முடிவு செய்யுங்கள்.

 

கேட்டை
கேட்டை மூத்த மைத்துனருக்கு ஆகாது என்பது கேட்டையில் பிறந்த அனைவருக்கும் பொருந்தாது. இப்போது கேட்டையில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் கிரகங்கள் எப்படி இருந்தால் தோஷம் தரும் என்று பார்ப்போம்.

லக்னத்திலிருந்து 5ம் இடம் மூத்தமைத்துனரை குறிக்கும் இடம். இதில் பாவிகள் காணப்பட்டாலும், 5ந்துக்கு 7ல் பாவிகள் இருந்தாலும் மூத்த மைத்துனருக்கு இன்னல்கள் ஏற்படலாம். கேட்டையின் அதிபதியாகிய புதன், ராகு, கேது, செவ்வாய், குரு இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் மூத்த மைத்துனருக்கு துன்பம் வரலாம். ஆபத்து இருக்காது.

 

பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 

1. திதி,  2.வாரம்,  3.நக்ஷ்த்திரம்,  4.யோகம்,  5.கரணம் என்பனவாம்.

தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன. 
ஒன்று "திருகணித பஞ்சாங்கம்", மற்றது "வாக்கிய பஞ்சாங்கம்".

கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப்பெற்றன.

கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது வாக்கிய முறை எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.

காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள் "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.

இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களை ஆராச்சி செய்து அறிவதற்கு பல தொழில் நுட்ப உபகரணங்கள் உள்ளன. அவைகள் மூலம் நுட்பமாக கிரகங்களின் வேகம், அவற்றின் நிலைகளைக் கண்டறியக் கூடியதாக உள்ளது. தற்போதுள்ள வான வியல் முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமையானது என்று பாவிப்பாரும் உளர்.

திதி: அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக ("0" டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.
விளக்கமாக கூறுவதாயின்; சூரியன் - சந்திரன் - பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பூர்வபக்க பிரதமை முதல் அமாவாசை வரையான 30 திதிகளாகும்.  அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரைன காலத்தில் வரும்) 15 திதிகளும் சுக்கில பட்சத் திதிகள் எனவும்; தேய் பிறை காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும் 

'சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய "பிரதமையும்". மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள். 

அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் (தேய்-பிறைத் திதிகள்) கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள். .

புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் (கனத்த நாட்களில்) மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிகள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.

வாரம்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகள் வாரம் எனப்படும். இவை கிரகங்களின் பெயர்களில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. (ராகு, கேது கிரகங்களிற்கு சொந்த கிழமையும் இல்லை, சொந்த வீடும் இல்லை).

நட்ஷத்திரம்:                                                                                                                       
சந்திரன் இராசி மண்டல வலயத்தை சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் எந்த நட்சத்திரத்தின் மேல் நகர்கின்றதோ அப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது.

கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.

யோகம்:
இரு வகையான யோகங்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுகின்றன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:

1.விஷ்கம்பம்,   2.ப்ரீதி,   3.ஆயுஷ்மான்,  4.சௌபாக்யம்,   5.சோபனம்,  6.அதிகண்டம்,  7. சுகர்மம்,   8. திருதி, 9.சூலம்,  10.கண்டம்,  11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம்,  4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான்,  19.பரீகம்,  20. சிவம், 21. சித்தம்,  22. சாத்தீயம், 23. சுபம்,  24.சுப்ரம், 25.பிராம்யம்,  26.ஐந்திரம்,  27. வைதிருதி.

மற்ற யோகம் சுபாசுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.

நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.

உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.

ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.

சோதிட காலவாய்பாடு

60 தற்பரை =  1 வினாடி
60 வினாடி =  1  நாளிகை
60 நாளிகை =  1  நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்
60 வினாடி =  1 நாழிகை
60 நாழிகை =  1 நாள்
2 1/2 நாழிகை =  1 மணி
2 1/2 வினாடி =  1 நிமிஷம்
ஒரு நாள் :  60 நாழிகை (24 மணி)
ஒரு நாழிகை :  60 விநாழிகை
ஒரு விநாழிகை :60 லிப்தம்
ஒரு லிப்தம் :  60 விலிப்தம்
ஒரு விலிப்தம் :  60 பரா
ஒரு பரா :  60 தத்பரா 

 

ஜோதிட விளக்கம்:
பஞ்சாங்க குறிப்பு
:
சௌர வருஷம்:  சூரியன் மேடராசியின் ஆரம்ப நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முதல் மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதியை விட்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் (Sidereal revolution of Earth round the Sun). இக்காலப்பகுதி; சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலத்தைக் குறிப்பதாகும் Tropical revolution of Earth round the Sun. இக் காலப்பகுதி; 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.

சாந்திர வருஷம்:  சௌரவருஷப்பிறபிற்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வபக்கப் பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறபுக்கு முன் நிகழும் அமாவாசை முடியவுள்ள காலத்தைக் குறிப்பது. இக் காலப் பகுதி சுமார் 354 நாட்கள் கொண்டது.

சௌர மாதங்கள்:  மேடம் முதல் மீனம் ஈறாகவுள்ள பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரை முதல் பங்குனி வரையான 12 காலப் பிரிவுகளாகும். பகல் மானத்துள் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றும்; இரவு நிகழுமாயின் மறுநாளும் மாதப்பிறப்பாக கொள்ளப்படும்.

சாந்திர மாதங்கள்:  பூர்வப்க்க பிரதமை தொடக்கம் அமாவாசைமுடியும்வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகளாகும். மூன்று சௌர வருஷத்தில் 37 சாந்திர மாதங்கள் நிகழும். அதனால் சௌரமானத்துடன் சாந்திரமானம் இணங்கிச் செல்லும் பொருட்டு ஓர் சௌரமாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திரமாதம் "அதிகமாதம்" என் நீக்கப்படும்.

தமிழ் தேதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரையும் உள்ள காலமாகும்.

ஆங்கிலத் தேதி: இரவு 12 மணி தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.

இஸ்லாமிய தேதி:  சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள காலப் பகுதியாகும்.

"அவமா" : ஒரு தினத்தில் மூன்று திதிகள் சம்பந்தப்பட்டால் அன்று "அவமா" அழைக்கப்படும்.

திரிதினஸ்புருக்: ஒரு திதி மூன்று நாட்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் அது "திரிதினஸ்புருக்" என்று அழைக்கப்படும்

 

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz