Thursday, 10.02.2025, 6:41 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

புதன்

        

 

வித்யா காரகன் புதன். கணிதம், லாஜிக், வைத்தியம், ஜோதிடம் ஆகிய அனைத்திற்கும் நாயகன் புதனே. நாடகம், நடனம், புத்தக பிரசுரம் ஆகியவற்றிற்கு புதனின் பலமே வேண்டும். உடலில் நரம்பு இவன். நரம்பு மண்டலத்தின் ஆதாரமும் இவனே. வடகிழக்கு புதனுக்கு உரிய திசை. புதன் ஜாதகத்தில் வலுப்பெற்றிருந்தால் ஜோதிடக்கலை சித்திக்கும். புதனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் காசியில் உள்ளது. திருவெண்காடு புதனுக்குரிய தலம். விஷ்ணு இவருக்கு அதி தேவதை. நாராயணன் பிரத்யதி தேவதை.. மரகதம் புதனுக்கு உகந்த ரத்தினம். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருவெண்காடு உள்ளது. இக் கிரகத்தின் அதி தேவதை மகா விஷ்ணு ஆவார். காசிக்கு இணையான அந்தஸ்த்தை பெற்றுள்ளது. காசியில் செய்யும் சிரார்த்தங்களுக்கு என்ன பலனோ அதே பலன் இத்தலத்திலும் உண்டு . அனைத்து கர்மகாரியங்களும் காசிக்கு ஈடாக இங்கு நடைபெறுகின்றது. புதன் என்று தமிழிலும், MERCURY என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும், இக்கிரகம்கல்வியும், கலைத்துறையும் தனது அதிகாரத்தில் கொண்டது. புதனால் ஏற்படும் நோய் இதய நோய்கள், ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல் நோய்கள், நரம்பு தளர்ச்சி, இரைப்பை புண் போன்றவை.

             1 ஆம் வீட்டில் இருந்தால் அதாவது லக்கினத்தில் இருந்தால் நல்ல புத்தி உடன் இருப்பார்கள் நல்ல பேச்சு இருக்கும் பேச்சில் இனிமை இருக்கும். நல்ல உலக விஷயங்களில் சிறந்த அறிவு இருக்கும். நல்ல சுறுசுறுப்பாகவும் நல்ல தோற்றப்பொழிவுடன் இருப்பார்கள். லக்கினத்தில் இருந்து ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவியுடன் பிடிப்புடன் இருப்பார்கள்.

   2 ஆம் வீட்டில் இருந்தால் பேச்சு நன்றாக இருக்கும் இவரின் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். தந்தையிடம் இவருக்கு மதிப்பு இருக்கும் குடும்பம் சிறந்து விளங்கும். செல்வ வளம் நன்றாக இருக்கும்.

   3 ஆம் வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களில் இரட்டை பிறப்பு உள்ளவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு. நல்ல ஆயுள் இருக்கும். வியாபார நுட்பம் ஏற்படும். புதன் மிதுனம் ராசிக்கும் கன்னி ராசிக்கும் அதிபதி. புதன் ஒரு இரட்டை கிரகம் இந்த ராசியில் இவர்கள் உள் ஒன்று வைத்து வெளியில் ஒரு மாதிரி பேசுவார்கள். இரட்டை வேஷம் மிகுதியாக இருக்கும். இது. மிதுனம் கன்னி ராசிகாரர்கள் காமத்தில் மிகுதியான ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறப்பது தாமதமாகிறது. நான் பார்த்த இந்த ராசிகாரர்களின் ஜாதகங்களில் மிகுதியான நபர்களின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நடைபெறுவது தாமதமாகிறது.

      4 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கல்வியாற்றலைத் தருவார். தாய்வழி மாமன் வகையில் உதவி கிடைக்கும். வாகனம் வகையில் நல்ல வருமானம் வரும். ஒரு வாகனம் வாங்கினால் உடனே அடுத்த வாகனம் வாங்குவார். நான்காம் வீடு வீட்டை குறிப்பதால் வீடு வாங்கும் யோகம் புதனால் கிடைக்கும். ஒரு வீட்டை வாங்க ஏற்பாடு செய்தால் இரண்டு வீடு வாங்குவார்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.

      5 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல கவிதை எழுதுவார். நல்ல வேடிக்கையாக பேசுவார். அரசாங்கம் மூலம் நல்ல பதவிகள் வரும். பெரியவர்கள் மூலம் நல்ல பதவி, மரியாதை கிடைக்கும். நல்ல தந்திர வேலைகள் தெரியும்.

   6 ஆம் வீட்டில் இருந்தால் மாமன் வழியில் ஒருவர் மிகபிரபலமாக இருப்பர். மாமனின் உதவி கிடைக்கும். ஆறாம் வீடு சத்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் விரோதிகள் வராமல் இருக்க வைப்பார். ஆனால் சச்சரவு இருக்கும். பேச்சு சில நேரங்களில் கலவரத்தை உண்டாக்குவது போல் இருக்கும்.

   7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும். அவர் மூலம் வருமானம் வரும். வியாபாரத்தில் நல்ல நட்பு கிடைக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ஆயுள் கிடைக்கும். மாமன் மகள் கூட மனைவியாக வர வாய்ப்பு இருக்கிறது. அல்லது திருமண விஷயங்களில் மாமன் உதவி கொண்டு திருமணம் வரும். மாமனே பெண் பார்க்கலாம்..

    8 ஆம் வீட்டில் இருந்தால் கல்வியில் தடை ஏற்படும். மாமன் இருக்கமாட்டார் அப்படியே மாமன் இருந்தாலும் அவர் மூலம் எந்த பயனும் இருக்காது. புதன் நல்ல முறையில் இருந்தால் உயில் மூலம் சொத்து வரும்.

         9 ஆம் வீட்டில் உள்ள இருந்தால் செல்வம் நன்றாக இருக்கும். குழந்தை பாக்கியம் இருக்கும். நன்றாக கவர்ந்து இழுக்கும் பேச்சு திறன் இருக்கும். நன்றாக உயர்கல்வி படித்திருப்பார்கள். உயர்கல்வியில் சிறந்த விளங்க உதவி செய்வார்.

        10 ஆம் வீட்டில் இருந்தால் அரசாங்க வேலையில் இருப்பார்கள். சொத்துகள் சேரும் ஏஜென்சி தொழில் லாபம் தரும். ஆடம்பர பொருட்கள் வீடு தேடி வரும். தொழில்கள் நிறைய செய்யவைப்பார். மாமன் மூலம் தொழில் அமையும். அறிவுக்கு முக்கியம் கொடுத்து செய்யும் தொழிலில் செய்வார்.     

          11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணக்காரராக இருப்பார்கள் பெண்கள் மூலம் வசதி வாய்ப்பு வரும். மூத்த சகோரர் மூலம் வருமானம் வரும். நல்ல புத்திசாலி உள்ள நண்பர்கள் கிடைப்பார்கள்.

        12 ஆம் வீட்டில் இருந்தால் படிப்பறிவு இல்லாமல் போகும். வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள் தோல்வியாதி உள்ள பெண்ணிடம் தொடர்பு இருக்கும். பெண்கள் மூலம் விரையம் ஏற்படும். நல்ல துப்பறியும் திறன் இருக்கும். மேலை சொன்ன பலன்கள் பொதுவானவைதான். புதன் நல்ல முறையில் இருக்கும் போது இந்த பலன்கள் நடைபெறலாம்.

Login form
TIME
NASA
calendar
«  October 2025  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz