Thursday, 10.02.2025, 8:32 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

தசைக்கு பரிகாரங்கள் :

 

 

 

 

கெடு பலன் தசைக்கு பரிகாரங்கள் :

ஜனன ஜாதகத்தில் 6,8,12 ம் இடத்தில் இருந்து தசை நடைப்பெற்றாலும், நீசம், பகை, அஸ்தங்கம், வக்கிரம், கிரகயுத்தத்தில் தோற்றகிரகம், பாதகாதி பதியுடன், மாரகாதிபதியுடன் சேர்ந்த கிரகம், நவம்சத்தில் பகைகிரகத்துடன் உள்ள கிரகம் தசை நடைப்பெற்றாலும் கிரகம் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட மிக எளிய பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள். தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை, புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.

 

1.சூரியன்

சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும். இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர அதனால் சூரியனால் உண்டாகும் கெடு பலன்கள் குறையும்.

 

2.சந்திரன்

வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டுவிடவும். அதனால் சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

 

3.செவ்வாய்

தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய அதனால் செவ்வாய்க் கிரகத்தின் கெடு பலன்கள் குறையும்.

 

4.புதன்

பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் அதனால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.

 

5.குரு

வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வர அதனால் குரு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

 

6.சுக்ரன்

சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட அதனால் சுக்கிரனால் உண்டான கெடு பலன்கள் குறையும்.

 

7.சனி

ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்க அதனால் சனி பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

 

8.ராகு

பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டு போய் விட அதனால் ராகு பகவானால் உண்டான கெடு பலன்கள் குறையும். இதை நாக பஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

 

9.கேது

இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க அதனால் கேது பகவானால் உண்டான கெடு பலன்கள் குறையும்.

Login form
TIME
NASA
calendar
«  October 2025  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz