Wednesday, 07.03.2024, 4:35 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

மந்திரங்கள் உச்சரிப்பதின் மகத்தான பலன்கள் புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது எது

   

                      

வேதத்தில் மந்திர சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. நடைமுறையில் மந்திரசாஸ்திரம் என்றால் தீய விளைவுகளுக்கு பயன்படும் விஷயமாக எண்ணுகிறார்கள். மந்திர சாஸ்திரத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் சிறந்த நிலையை அடையலாம். யோக சாஸ்திரம் பரமாத்மாவை அடையும் பல வழிகளை கூறுகிறது.
ஹத, ஞான, கர்ம , பக்தி மற்றும் மந்திர யோகம் எனும் ஐந்து பாதைகளைக் கொண்டு ஆன்ம தரிசனம் அடைய முடியும் என யோக சாஸ்திரம் கூறுகிறது. யோக சாஸ்திரத்தில் மந்திர யோகம் ஓர் அங்கம் என்பதின் மூலம் மந்திர சாஸ்திரத்தின் உயர்வை உணரலாம்
மந்திர உச்சாடனம் செய்யும் பொழுது நமது உடலில் உள்ள 72,000 நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. மந்திர ஜெபம் மனதை ஒருமுகப்படுத்துகிறது. மனதில் ஏற்படும் சலனத்தை தெளிவாக்குகிறது.மந்திர ஜெபம் செய்யும் பொழுது எண்ண அலைகள் மந்திரத்துடன் அடங்கி மனம் தெளிவடையும்.
ஜெபம் என்றால் தொடர்ந்து உச்சரிப்பது என பொருள்படும். ஜெபம் மற்றும் அஜெபம் என இரு தன்மைகளை கொண்டது, மந்திரஜெபம். தூய்மையான மனதுடன் மந்திரத்தை உச்சரிப்பது மந்திர ஜெபம் எனப்படும். தொடர்ந்து மந்திர ஜெபம் செய்த பின்பு வேறு நடவடிக்கைகள் செய்யும் பொழுது நம்மை அறியாமல் மனம் ஜெபம் செய்து கொண்டிருக்கும். இது அஜெபம். அதாவது சமஸ்கிருத சொல்லான அஜெபம் ஜெபிக்காத ஜெபம் என மொழி பெயர்க்கலாம்.
என்ன மந்திரம் ஜெபிக்கலாம் ?

வேதத்தில் காணப்படும் அனைத்து வாசகங்களும் மந்திரம் என்றே அழைக்கப் படுகிறது. அதில் சக்தி வாய்ந்த சில வார்த்தைகள் இணைவு பெற்று காணப்படுவதால் வேதம் உயர்வான மந்திரம் என அழைக்கப்படுகிறது.
பீஜமந்திரம் , தேவதாமந்திரம் , பாராயணம் என இவற்றை எளிமையாக வகைபடுத்தலாம். பீஜமந்திரம் என்பது ஓர் வார்த்தை கொண்டது.. "பீஜ" என்றால் விதை எனப்படும். ஓர் சிறு வித்தாக ஒலிக்கும். பீஜ மந்திரம் ஒரு மிகப்பெரிய மரம் போன்று வளர்ந்து ஆன்மீக புரட்சியை ஏற்படுத்தும். "ரீம்" எனும் பீஜ மந்திரத்தை உச்சரித்த வண்ணம் பறந்து, தேன் சேகரிப்பதால்தான், தேனியின் எச்சில் கூட புனிதமாக கருதப்படுகிறது.

தேவதா மந்திரம் என்பது குறிப்பிட்ட கடவுளை உருவகப்படுத்தும் மந்திரம். இது சில வரி கொண்டதாக இருக்கும். காயத்ரி மந்திரம் மற்றும் மஹா மந்திரங்கள் இதில் அடங்கும்.

பாராயண மந்திரம் என்பது பல வரிகள் கொண்ட நீண்ட சொற்றொடர்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ர நாமம், அஷ்டோ த்ர நாமாவளி, ருத்ரஜெபம் என இதற்கு உதாரணம் கூறலாம். சிறந்த குருவின் மூலம் மந்திர தீட்சை பெற்று ஜெபம் செய்வதெ நன்று. இதற்கு.

மந்திரம் உச்சரிக்கும் முறை, அதை உச்சாடனம் செய்யுமிடம், உச்சாடனம் செய்பவரின் தன்மை அறிந்து குரு, தீட்சை அளிப்பதால் மந்திர தீட்சை குருவின் மூலம் பெறுவது சிறந்தது.

 சில சமஸ்கிருத மந்திரங்கள் சரியாக உச்சாடனம் செய்யவில்லை என்றால் பலன் அளிக்காது. குருதீட்சை அளிக்கும் பொழுது இதை சரியாகப் பயன்படுத்த துணைபுரிவார்.

       புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது எது

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

 

பசுவிற்கு பழங்கள் , அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும். 



பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார , அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள குடும்பத்தில் - தாயோ, தந்தையோ  இறந்து விட்டால்  அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.

இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய , அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ , பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும்.

சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. 


இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் ஏற்படுகிறது..

கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கலாம்.

 

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz