திருவாரூரில் இருந்து கும்பகோனம் செல்லும் சாலையில் வடகண்டம் என்ற ஊரில் உள்ள கரவீர நாதர் ஈஸ்வரர் கோயிலில் செவ்வந்தி மாலை
அணிவித்து அர்ச்சனை செய்ய தோச நிவர்த்தி ஆகும்.
திருஞான சம்பந்தர் தான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் இப்பெருமானை வழிபட்டால் வினைகள்யாவும் நீங்கும் என பாடியுள்ளார். எனவே பக்தர்கள்
ஏதேனும் ஒரு இரவில் இங்கு தங்கி மறுநாள் இறைவனை வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட கஷ்டமாக இருந்தாலும் நீங்கி விடும் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் கண்டாந்த்ர நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்ராலும் அந்த பாவம் பாதிக்கப்படும்...லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மூலம் 1 ஆம் பாதத்தில்
இருந்தால் திருமண தடங்கல், குடும்ப வாழ்வில் பிரிவு போன்ர பிரச்சினைகள் உண்டாகும். 9 ஆம் பாவம் நின்ரால் தந்தைக்கு பாதிப்பு..நான்காம்
அதிபதி நின்றால் தாய்க்கு பாதிப்பு.. செவ்வாய் நின்ரால் சகோதரனுக்கு பாதிப்பு ,புதன் நின்றால் கல்வி தடை உண்டாகலாம். இதற்கு பரிகாரம் கரவீர நாதர் கோயிலில் வழி படுவது தான்.