Thursday, 10.02.2025, 8:18 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

சூரியன்

       

 

      பூமி சூரியனைச் சுற்றிவரும் வட்டப்பாதையில் ஒரு  நாளைக்கு ஒரு  டிகிரி என்று வேகத்தில் நகர்ந்தால் ஒரு முழுச்சுற்றுக்கு 360 நாள்தான் ஆகும். பின் எப்படி 365.25  நாள் என மாற்றி அமைத்திருப்பார்கள் என்ற கேள்வி எழும். ஒரு குறிப்பிட்ட வானியல் புள்ளியை மையமாகக் கொண்டு பூமி சுற்றிவருவதை கணக்கிட்டார்கள். 360 டிகிரி கொண்ட வட்டப்பாதையின் துவக்கப்புள்ளியை பூமி மீண்டும் அடைய 365.25  நாட்கள் ஆவதை அறிந்ததோடு மட்டுமின்றி அது வட்டப்பதையால்ல நீள் வட்டப்பாதை எனத்திருத்தி வருட நாட்களை உருவாக்கினார்கள். வார நாட்களுக்கு கண்ணால் காணும் ஏழு கிரகங்களின் பெயர்களையே சூட்டினார்கள்

                      உலகில் அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் ஆகிய எல்லாவற்றுக்குமே ஆத்மாவாக விளங்குவது சூரியனே. உஷா தேவி, சாயா தேவி ஆகிய இரு தேவிகளுடன் சூரியனார் கோவிலில் சூரியன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதி தேவதை. ருத்ரன் இவருக்கு பிரத்யதி தேவதை.மாணிக்கம் உகந்த ரத்தினம். ஏழு குதிரைகள் பூட்டிய ரதமே சூரியனின் வாகனம்! சூரியன் ஆன்மாவை பிரதி பலிப்பவன் சூரியன். சூரியன் அக்கினியை அதி தேவதையாக கொண்டவன். இவர் ஐந்தில் வந்து அமரும் போது புத்திர தோஷத்தை தருகிறார். ஏழில் வந்து அமரும் போது களத்திர தோஷத்தை தருகிறார்.கதிரவன், ரவி, பகலவன் என பல பெயர்கள்  உண்டு. தகப்பனை குறிக்கும் கிரகம் சூரியன். கார்த்திகை, உத்திரம், உத்திராடம், நட்சத்திரத்துக்கு உரியவன். சொந்த வீடு சிம்மம். உச்சவீடு-மேஷம், நீச்சவீடு-சுக்கிரன், இருதய நோய்கள், மஞ்சள் காமாலை ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டோரும் ஏழரை சனி, ஜென்மசனி, அஷ்டமசனி, உள்ளோரும், நவக்கிரக தோஷங்கள் உடையோரும் சூரிய பகவானை வழிபட்டால் நன்மை பயக்கும். சூரியனே நவக்கிரகங்களுள் முதன்மையாகும் ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, வீரம், பராக்ரமம், சரீர சுகம், நன்னடத்தை. கண், ஒளி, உஷ்ணம், அரசு, கிழக்குத் திசை, சூரியனின் அருளால் வடமொழி அறிவு ஏற்படும் சுயநிலை ,சுய-உயர்வு, செல்வாக்கு கௌரவம், ஆற்றல், வீரம், பராகிரமம், உஷ்ணம், ஏற்படும் நோய் மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண் நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, வயிற்றில் பூச்சிகள், ஜுரம், நோய், தகப்பனார்,  உடல்பலம், ஆண்மை, பரிசுத்தம், அரசியல் தொடர்பு, தகப்பனார் உடன் பிறந்தவர்கள், பிதுர் காரகன். சுய நிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கெளரவம், அந்தஸ்து, நன்னடத்தை, புகழ் அனைத்துக்கும், காரகர்சூரியனே, கி.மு.1100 ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கச்சோழன் என்னும் மன்னனால், கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சூரியனார் கோவில் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் வாழ்க்கையில் வெற்றியையும், வளத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கும் சூரிய கடவுள் என்னும் சூரியன் கிரகத்திற்குண்டானது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் மத்தியில், தமிழ் தை மாதம் ஆரம்பம் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாள், இந்த சூரியகடவுளை முன்னிறுத்தியே கொண்டாடப் படுகின்றது. கண்களால் காணக்கூடிய தெய்வமாக  வணங்கக் கூடிய தெய்வமாக, சக்திவாய்ந்த தெய்வமாக மனதில் கொண்டு பல்வேறு உருவகங்களில் ஆராதிக்கப் படுகின்றார். இக்கிரகத்தின் அதி தேவதை சிவனாக கொள்ளப்படுகிறது.

          ஒவ்வொரு வீட்டிலும் சூரியன் இருந்தால் என்ன பலன்  ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருக்கும் போது அந்த வீடு அந்த கிரகத்திற்க்கு அது உகந்த வீடா அல்லது அந்த வீடு பகை வீடா என்று பார்க்க வேண்டும். அந்த வீட்டிற்க்கு எந்த கிரகத்தின் பார்வை இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் பலன்கள் சரியாக இருக்கும். சூரியன் சொந்த வீட்டில் அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பணம் குவியும். செல்வாக்கு பெருகும் பலம் குறைந்து சூரியன் அமர்ந்தால் பணத்தை இழக்க நேரிடும் படிப்பு குறைவு ஏற்படும், முரட்டு தனமான பேச்சு ஏற்படும்.

             இரண்டாம் வீட்டில் இருக்கும் சூரியனால் குடும்ப நலத்தை பெறுவது குறைவாகும். சூரியன் முதல் வீட்டில் இருந்தால் கண்ணில் நோய் இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரன் வீடான கடகம் லக்கனம் ஆக இருப்பவர்கள் கண்ணில் ஒரு கோடு இருக்க வாய்ப்பு உண்டு. முதல் வீட்டில் சூரியன் இருக்கும் போது அந்த நபர் மிக சிறந்த திறமையாளராகவும் இருப்பார். அந்த லக்கனம் மேஷமாகவும் அல்லது சிம்மமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் அந்த நபருக்கு பணம் நன்றாக வரும். நல்ல படிப்பையும் கொடுப்பார்.ஒரு சிலர் பித்த சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கும் தலையில் பாரமாக இருக்கிறது என்று சொல்வார்கள். திருமண வாழ்வு சந்தோஷமாக இருக்கும். கோபமும் பொறுமை இல்லாதவராகவும் இருப்பார்கள். முதல் வீடு லக்கனம் லக்கனத்தில் சூரியன் இருந்தால் தலை வழுக்கை தலையாக இருக்க வாய்ப்பு உண்டு அல்லது ஏறு நேற்றியாகவும் இருக்க வாய்ப்பு அதிகம். உங்கள் ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு முதல் வீட்டில் சூரியன் இருக்கிறது ஆனால் முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இல்லை என்று கேட்க வேண்டாம். எல்லாம் பொது பலன்கள் மட்டும்தான்.

    மூன்றாம் வீட்டில் இருக்கும் சூரியனால் நல்ல வீரனாக இருப்பார்கள். நல்ல செல்வவளம் இருக்கும். தாய் நலம் பாதிக்கப்படும். தாய்க்கும் மகனுக்கும் உறவுநிலை திருப்திகரமாக இருக்காது.

     நான்காம் வீட்டு சூரியன் நல்ல பலத்தோடு இருந்தால் அரசாங்கத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். சொத்துக்கள் சேரும். நல்ல நட்பு உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். தாயார் நல்ல நலத்துடன் வாழ்வார்கள்.நான்காம் வீட்டு சூரியன் கெட்டு இருந்தால் தாயார் நலம் பாதிக்கப்படும். மகிழ்ச்சி உண்டாகாது. அரசாங்கத்தில் பணியாற்றி மிகவும் குறைவாக சம்பாதித்து தந்தையின் சொத்துகளை அழிப்பார். இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

       5 ஆம் வீட்டில் நல்ல நிலைமையில் இருந்தால் நல்ல அறிவாற்றலை தருவார் . மலை பிரதேசங்களில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நல்ல பண வசதிகள் கிடைக்கும்.சூரியன் கெட்டு இருந்தால் கடுமையான புத்திர தோஷம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு ஏற்படும். இந்த இடத்தில் சூரியன் இருப்பது ஆயுள் குறைந்து இருக்கும்.

       6 ஆம் இடத்தில் நல்ல நிலையில் இருந்தால் பகைவர்கள் இருப்பார்கள். அவர்களை வெற்றிக்கொள்ளும் வாய்ப்பை தருவார். நல்ல பணிகளை செய்ய வைப்பர் .செல்வம் குவியவைப்பார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருக்கவைப்பார். நல்ல ஜரணசக்தி கிடைக்கும்.6- ஆம் இடத்து சூரியனால் சிற்றின்ப வேட்கையை அதிகமான தருவார். அரசாங்கத்தின் மூலம் பொருள் செலவு ஏற்படும். மனைவியின் உடல் நிலை சரியாக இருக்காது.

      7 ல் இருந்தால் ஆண் ஜாதகராக இருந்தால் பெண்களால் மனசிக்கலை தருவார். உடம்பில் அடிபடும். உடம்பு சுகம் இருக்காது கவலைகள் வரும் 7 ஆம் இடத்து சூரியனால் அரசாங்கத்திற்க்கு எதிராக ஈடுபடவைக்கும். திருமணவாழ்வில் தடை உண்டாகும். தொழிலில் வருமானத்தை உண்டுபண்ணமாட்டார். வாழ்க்கை துணையின் நலத்தை கெடுப்பார்.

        8 ல் உள்ள சூரியனால் கண் பார்வையை மங்கசெய்வார். அதிக காலம் வாழ்வது கடினம் ஆயுளை குறைக்க செய்வார். செல்வத்தை இழக்க செய்வார். நண்பர்கள் மூலமும் பெண்கள் மூலமும் தீமைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களை விட்டு பிரிவார்கள். உடலில் மர்மபாகங்களில் உபத்திரம் உண்டாகும். மனதில் எப்பொழுதும் கவலை ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்.

        9 ல் உள்ள சூரியனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆட்சியில் இருந்தால் தந்தையிடம் நன்றாக நடந்துகொள்வார் தந்தையாரின் பாசம் இவருக்கு கிடைக்கும்.பகைவீட்டில் இருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு கெடுக்கும். அடிக்கடி பயணம் செய்ய வைக்கும் நல்ல அறிவு வெற்றி வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை பெறவைக்கும்.

         10 ல் உள்ள சூரியனால் நல்ல கல்வி கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தில் பணிபுரிய நேரிடும் வாகன வசதி கிடைக்கும். பெரிய தொழில்களை நிர்வகிக்க முடியும்.

     11 ல் உள்ள சூரியனால் செல்வம் குவிய செய்வார். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வர் நல்ல உடம்பு பலம் உண்டாகும். பல்வேறு துறைகளில் வருவாய் வர செய்வார். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும் அரசாங்க வேலை கிடைக்கும்.

     12 ல் உள்ள சூரியனால் தொழில்களில் வீழ்ச்சியை உண்டாகும். அனைத்து முயற்சிகளிலும் தோல்வியை உண்டாக்குவார் செல்வ வளம் இருக்காது. புனித காரியங்களுக்காக செலவு செய்திடவைப்பார். புனித யாத்திரை செய்திடவைப்பார்.

 

 

Login form
TIME
NASA
calendar
«  October 2025  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz