Tuesday, 07.01.2025, 10:11 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

நாள், நேரம்


 எந்த மாசத்தில் பூர்ணிமை, அமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
* எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோ, இரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
* விஷ மாசத்திலும், மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
* ஆனால் சித்திரை, வைகாசி, மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.
===========================================================
அயனங்கள்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன்  மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.
 
தைமாதம் தொடங்கி ஆனி முடிய  6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம்,க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
 =========================================================
ருதுக்கள் - 6
ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்திரை, வைகாசி - வஸந்த ருது
ஆனி, ஆடி, - க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை - சரத் ருது
மார்கழி, தை - ஹேமந்த ருது
மாசி, பங்குனி - சிசிர ருது
கிழமைகள் - 7
ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.
சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது
ஞாயிறு - பானு வாஸரம்
திங்கள் - இந்து வாஸரம்
செவ்வாய் - பௌம வாஸரம்
புதன் - ஸௌம்ய வாஸரம்
வியாழன் - குரு வாஸரம்
வெள்ளி - ப்ருகு வாஸரம்
சனி - ஸ்திர வாஸரம்
==========================================================
இராகு காலம் :
கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 - 06.00
திங்கள் = 7.30 - 9.00
செவ்வாய் = 03.00 - 04.30
புதன் = 12.00 - 01.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 10.30 - 12.00
சனி = 09.00 - 10.30
=======================
கீழே சொல்லி இருக்கிற மாதிரி, ஒரு வரிப் பாட்டு ஞாபகத்திலே வைச்சுக்கோங்க. ..... ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் முதல் எழுத்து ---- அந்த கிழமை -- வரிசைலே ஒரு ஆர்டரா வரும்.  
திருவிழா ந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
===================================================== 

. உங்களுக்கு வர்ற கஷ்டங்கள் மறைஞ்சு , நீங்க ஒரு நல்ல நிலைக்கு வரணும்னு விரும்பினால் - ராகு கால நேரத்தில் , அம்மன் வழிபாடு செய்யுங்க. லலிதா சகஸ்ரநாமம், அல்லது மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம் சொல்லுங்க. சொந்த தொழில், வியாபாரம் பண்றவங்க தினம் கூட பண்ணலாம். முழுசா  ஒண்ணரை மணி நேரம் முடியாட்டாக் கூட , கடைசி அரை மணி நேரம் பண்ணுங்க.. உங்க வீடு, அலுவலகம்  - இப்படி உங்களுக்கு தோதான இடங்களிலே பண்ணலாம் .  அம்மன் படத்திற்கு மாலை போட்டு, தீபம் ஏற்றி பண்ணுங்க.. 
 நீங்க இருக்கும் இடத்து கிட்டே , இருக்கிற அம்மன் ஆலயம் நீங்க போய் வழிபட முடிஞ்சா  இன்னும் நல்லது.. அந்த ஆலயம் ஒரு 200 / 300 வருடம்1000 பழமையான ஆலயமா  இருந்தால் ரொம்ப விசேஷம்.. 

சொந்த தொழில் இல்லாதவங்க தினம் கோவிலுக்கு போக முடியாது . நீங்க , ஞாயித்துக் கிழமை சாயங்காலம் , மிஸ் பண்ணாமல் செய்யுங்க. மற்ற நாட்களில் உங்க வீட்டுலே இருக்கிறவங்க , போக முடிஞ்சா போய்ட்டு வரட்டும்.
 உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா  முதல் ஆளா , துடிக்கிறது உங்க அம்மா தான்.. அப்பா , நீங்க ரொம்ப , ரொம்ப கஷ்டப்பட்ட பிறகு தான் , நீங்க கெஞ்சுனா தான், உங்களுக்கு உதவி செய்வார். இல்லையா? அம்மா, நீங்க கேட்கிறது, அவங்களாலே கொடுக்க முடிஞ்சா , உடனே கொடுத்திடுவாங்க இல்ல? உங்க விதிப்பயன்படி, உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் உடனடியா கிடைக்க , ராகு கால அம்மன் வழிபாடு - ரொம்ப சுலபமான முறை.
 ===================================================
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 - 01.30
திங்கள் : 10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் : 07.30 - 09.00
வியாழன் : 06.00 - 07.30
வெள்ளி : 03.00 - 04.30
சனி : 01.30 - 03.00
கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 - 07.30
திங்கள் : 03.00 - 04.30
செவ்வாய் : 1.30 - 03.00
புதன் : 12.00 - 01.30
வியாழன் : 10.30 - 12.00
வெள்ளி : 09.00 - 10.30
சனி : 07.30 - 09.00
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00 
 

Login form
TIME
NASA
calendar
«  July 2025  »
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz