Thursday, 10.02.2025, 6:41 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

செவ்வாய்

        சகோதர காரகன், ரத்தத்திற்கு காரகன் செவ்வாய். உடல் உறுதி, மன உறுதி தருபவன் செவ்வாய். உஷ்ணம், கோபம், எரிபொருள் ஆகியவற்றிற்கு உரியவன் செவ்வாய். கண்டிப்பதும் இவனே, தண்டிப்பதும் இவனே. மாபெரும் போர் வீரர்களை வழி நடுத்துபவன், பெரும் விளையாட்டு வீரர்களுக்கு அருள் பாலிப்பவன். செந்நிறத்தோல் அழகன், கடும் பார்வை உடையவன், பொறுமை அற்றவன் . தெற்கு திசை செவ்வாய்க்கு உரியது. வழிபடுவோரின் விருப்பத்தை பூர்த்தி செய்பவன் இவன். தேசத்தை வழி நடத்தும் தலைவர்கள், படை தளகர்த்தர்கள், தீ போல சுட்டெரித்து தூய்மையை விரும்புவோர் ஆகியோரின் நாயகன் செவ்வாய். பவளமே செவ்வாய்க்கு உகந்த ரத்தினம். ஆட்டுக்கிடா செவ்வாயின் வாகனம். செவ்வாயினால் ஏற்படும் நோய் மூலநோய், நீரிழிவு, இரைப்பை மற்றும் குடல் நோய்கள், மனஅழுத்தம், தோல் வியாதிகள், இதய நோய், நரம்புத் தளர்ச்சி, அம்மை, விபத்து மற்றும் ஆயுதங்களால் பாதிப்புகள். அங்காரகன், குஜன், மங்களன், பெளமன், உக்கிரன் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் செவ்வாய் நவக்கிரகங்களுள் மூன்றாவது இடத்தைப் பெறுபவன். கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வைத்தீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வைதீஸ்வரன் கோவில். இக்கோவிலில் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு சிறப்புத்தலமான கோவில் உள்ளது. ஆங்கிலத்தில் 'மார்ஸ்' (MARS) என்று அழைக்கப் படும் இந்த செவ்வாய் கிரகம் வீரத்தையும், வலிமையையும், வெற்றியையும் வழங்கக் கூடிய தகுதி உடையவர். பக்தர்கள் கோவிலில் நுழைந்தவுடன் முதலில் சரும உபாதைகளுக்கு சிறந்த நிவாரணியாகக் கருதும் குணங்களைக் கொண்ட திருக்குலமாகிய சித்தாமிர்த குளத்தில் குளியல் செய்கின்றனர். மேலும் இத்தலத்திற்கு விஜயம் செய்து, செந்நிற, மண வாழ்க்கைக்கு ஆதாரமான செவ்வாயை ஆராதனை செய்தால், செவ்வாய் தோஷம் நீங்கப் பெற்று விரைவில் மணவாழ்க்கை அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். சுப்ரமணிய கடவுளின் ஆதிக்கத்தில் உள்ள செவ்வாய் பூமா தேவியின் மைந்தனாவார்.            

             1 ல் இருந்தால் தலையில் அடிபடும். செவ்வாய் ஒன்றாம் வீட்டில் இருந்து 7 ம் பார்வையாக 7 ம் வீட்டை பார்ப்பதால் திருமண வாழ்வில் சங்கடங்கள் ஏற்படும். செவ்வாய் முதல் வீட்டில் இருப்பதால் மூர்க்கதனமாக கோபம் வரும். தாயாருக்கு தீங்கு விளைவிக்கும். கோபம் அதிகரிக்கும். இளம்தோற்றமாக காணப்படும். உடம்பில் உஷ்ணம் காரணமாக கட்டி ஏற்படும். நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள். தலையில் அடிப்படும். ஏதாவது விதத்தில் தலையில் அடிப்படும். செவ்வாய் தசையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செவ்வாக்கு சொந்த வீடாக அல்லது உச்ச வீடாக இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் எந்த இடத்தை பார்கிறதோ அந்த இடம் பாதிக்கப்படும் காரணம் செவ்வா கால புருசதத்துவத்திற்கு 8 ம் இடத்து அதிபதி ஆவார்

        2 ம் வீட்டில் இருந்தால் வாக்கில் கடுமை இருக்கும். பேச்சில் சண்டை வரும். செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ உச்சவீடாக இல்லாவிட்டால் அவர் சொல்லே அவருக்கு விரோதமாக ஆகும். கையில் காசு தங்காது. செவ்வாய் இரண்டில் இருப்பதால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள். கண்ணில் தொந்தரவு இருக்கும். செவ்வாய் பலம் பெற்று இருந்தால் நல்லது நடக்கும். செவ்வாய் இரண்டில் இருப்பதால் தோஷம் ஏற்படும்.  

       3 ம் வீட்டில் இருந்தால் நல்ல தைரியசாலியாக இருப்பார். காதில் தொந்தரவு இருக்கும். செல்வம் நிறைய கிடைக்கும். நல்ல அறிவாற்றல் கிடைக்கும். உடம்பு நல்ல உறுதியாக இருக்கும். இளைய சகோதரருக்கு கெடுதல் செய்யும். சிலபேருக்கு இளைய சகோதர,சகோதரிகள் இருக்க மாட்டார்கள். 3 ஆம் வீட்டில் செவ்வாய் பலம் பெற்றால் நல்ல வாழ்க்கை அமையும். 3 ஆம் வீட்டு செவ்வாய் மூலம் தாய்நலம் கெடும்.

       4 ம் வீட்டில் இருந்தால் தாய்வீட்டின் சொத்து கிடைக்கும். தாயின் உடல்நிலை மோசமாக இருக்கும். கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். 4 ஆம் வீட்டு செவ்வாய் பலம் குறைந்தால் வாழ்க்கையில் வசதி வாய்ப்பு குறையும். மார்பில் வலி ஏற்படும்.

       5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரதோஷம் ஏற்படும். புத்தி மங்கும். குழந்தைகளால் சண்டை சச்சரவுகள் ஏற்படும். வயிற்றுவலி ஏற்படும். எதிரிகளால் தொல்லை வரும். பணவரவு இருக்காது. 5 ஆம் வீடு செவ்வாய்க்கு சொந்த வீடாகவோ அல்லது உச்சவீடாகவோ இருந்தால் தடைகள் அனைத்தும் அகலும். 5ஆம் வீடு நாம் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்று காட்டும் இடம் ஆகையால் செவ்வாய் 5-ல் இருந்தால் சுப்பிரமணியரை வணங்க வேண்டும்.

     6 ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை வெற்றிகொள்ளும் தைரியும் இருக்கும். நல்ல சொத்துக்கள் சேரும். செவ்வாய் காமம் அதிகமாக இருக்கும். தாய்மாமனுக்கு தொல்லை தருவார். நல்ல செரிக்கும். இரத்தம் மாசுபடும் அதனால் உடலில் கட்டி ஏற்படும். நல்ல கற்றவர்களிடம் தொடர்பு ஏற்படும். புகழ் ஏற்படும். 6 ஆம் வீட்டு செவ்வாயினால் பெரும் பொருட்செலவு ஏற்படும்.

       7 ஆம் வீட்டில் இருந்தால் 7 ஆம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் தலையில் அடிபடும். திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும். செவ்வாய்க்கு நட்பு வீடாக இருந்தாலும் சொந்த வீடாக அல்லது உச்ச வீட்டில் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. பெண்களால் பிரச்சினை உண்டாகும். இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் முன் கோபக்காரர்களாக இருக்ககூடும்.

     8 ஆம் இடத்தில் இருந்தால் கண் பார்வை கெடும். ஜெயிலுக்கு செல்ல நேரிடும். இரத்த சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும்.கடன் பளு ஏற்படும். ஆயுள் குறையும். கோபம் அதிகம் வரும். சகோதர்களின் நலம் கெடும். பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்படும்.

     9 ஆம் இடத்தில் இருந்தால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். 9 ஆம் இடத்தில் உள்ள செவ்வாய்யால் தந்தையாரின் நலம் கெடும். தந்தைக்கும் இவருக்கும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கும். நற்பணிகள் செய்யமாட்டார். கொடிய செயல்கள் செய்ய வைப்பார். 9 ஆம் வீட்டு செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நல்ல நிலைக்கு உயர்த்துவார்.

      10 ஆம் இடத்தில் இருந்தால் கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் உயர்ந்த பதவியில் அமர வைப்பார். பதவியில் தலைமை இடம் தேடி வரும். நெருப்பு மூலமாகவும் வருமானம் பெருகும். பெரிய மனிதர்களிடம் இருந்து பெரிய பொறுப்புகள் தேடி வரும்.

      11 ஆம் இடத்தில் இருந்தால் பெரும் பணக்காராக மாற்றுவார். மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். பெரும் செலவு செய்து தொழிலில் முன்னேற்றம் காண வைப்பார். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளிடம் சண்டை சச்சரவு ஏற்படும்.

     12 ஆம் வீட்டில் இருந்தால் கெடுதல் அதிகம் இருக்கும். சிறை செல்ல நேரிடும். பெண்கள் மூலம் பொருளாதார இழப்பு ஏற்படும். மர்ம விலங்கினால் ஆபத்து ஏற்படும்.

Login form
TIME
NASA
calendar
«  October 2025  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz