Monday, 08.11.2025, 6:58 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

குளிகன்

 
 
 
 
 
 
 

 

 

  • கனமுள்ள குளியனுமே பதியில்நிற்க

  • ஆணப்பா அகம்பொருளும் நிலமுங்காடி

  • கூணப்பா குளியனுமே துதியில்நிற்க

    தாணப்பா தனவிரயம் தோடம் சொல்லு
  • தரணிதனில் துஷ்டனென்று கூறுகூறே
  • கொற்றவனே கலகனடா நேத்திரரோகன்ல்லு
    • அப்பனே அயன்விதியும் தீர்க்கஞ்சொ

 



சோதிடம் கூறப்புகும் மகனே! இன்னுமொன்றையும் நன்கு உணர்ந்து 

கொள்வாயாக. சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் 

கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல 

மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு 

அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று கூறுக. ஆனால் 

தனஸ்தானமான இரண்டாமிடத்தில் அமைய அவன் கலகன் எனவும் 

நேத்திர ஊனம் உறுவோன் என்றும் அதாவது கண்களில் ரோகம் பெறுபவன் 

என்றும், தனவிரயம் செய்வன் என்பது மட்டுமல்லாமல் தரணியில் துஷ்டன் 

எனவும் பெயர் வாங்குவன் என நீ துணிந்து கூறுவாயாக. 

 

          கூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க

  • கொற்றவனே துணைவனுடன் போரும்செய்வன்

  • வீரப்பா விரதனடா வாய்ச்சமர்த்தன்

​        விளம்புகிறேன் நாலினுட விவரங்கேளு

         பாரப்பா பதி கடந்து கிரியில் வாசம்

          பாலனவன் சிலகாலம் வாழ்ந்திருந்து

           கூறப்பா போகருட கடாக்ஷத்தாலே

            குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே.

 



இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் 

பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் 

என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல 

விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக. மேலும் நான் கூறுவதைக் 

கேட்பாயாக. குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் 

பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் 

வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை என்று போக முனிவரின் 

பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். இதை நன்கு ஆய்ந்து 

தெளிக. 

 

கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை

 

  • குணமாக வாழ்வனடா சேய்க்குதோஷம்

         தேரினேன் வீரனடா சத்துருபங்கன்

         திடமாக வாழ்வனடா தனமுள்ளோன்

         ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு

​          அப்பனே அடுத்தோரைக் காக்கும் வீரன்

           கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க.

          கொற்றவனே இப்பலனைக் கூறினேனே.

 





இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் 

நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் 

உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு 

பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன 

தான்ய சம்பத்துடைவன், மேலும் இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் 

பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே 

என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக. 

 

குறித்திட்டேன் குளிகனுமோ ரேழில்நிற்கக்

  • கொற்றவனே குடும் பிக்குக் கண்டம்சொல்லு

        சிரித்திட்டேன் சென்மனுக்கு விவாதத்தாலே

​        சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்.

       அரித்திட்டேன் அட்டமத்தில் குளிகன்நிற்க

​        அப்பனே அழும்பனடா ஜலத்தால் கண்டம்

        முரித்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே

​            முகரோக முண்டென்று மூட்டுவாயே.

 



மேலும் ஒரு கருத்தைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! 

இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் 

கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் 

சிவனருளாலே சித்திக்கும். அதே போல் எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் 

பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் 

என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம். என் குருவான போகருடைய 

கருணையாலே புலிப்பாணியாகிய நான் கூறும் இன்னொன்றையும் நீ 

அறிந்து கொள்க. இச்சாதகன் முகரோகன் என்பதையும் நீ உணர்த்துவாயாக. 

 

        மூட்டுவாய் குளிகனுமோ பாக்கியத்தில்

​           முகவசியன் அழும்பனடா பிதுர் துரோகி

          கூட்டுவாய் குவலயத்தில் தனமுள்ளோன்

​           குற்றமில்லை கருமத்தின் குறியைக் கேளு

              நீட்டுவாய் நீணிலத்தில் கருமிதுரோகன்

​                 நிலையறிந்து நீயறிவாய் அய்யம்வாங்கி

                தீட்டுவாய் தின்பனடா விரலேஉச்சம்

​                  சிறப்பாக செப்புவாய் திண்ணந்தானே.

 



இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் 

நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் 

பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் 

பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக. இனி 

பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் 

கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை 

நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் 

செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் 


பலன் கூறுக. 

 

              தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்

​           தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன்

             யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு

                    யென்மகனே வசியனடா ஜாலக்காரன்

                 வீணென்ற விரயனடா ரசவாதத்தால்

                       விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான்

                    கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே

​                    கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே

 

இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் 
பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ 
சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன்.

இனி 
பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் 
செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். குருவான 
போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு 
உணர்த்துக. 

Login form
TIME
NASA
calendar
«  August 2025  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz