Wednesday, 07.03.2024, 4:42 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

விவாஹப் பொருத்தத்தின் முக்கிய அம்சங்கள்

திருமணப் பொருத்தம் பார்ப்பது 
1. ஆண்,பெண் ஜாதகங்களின் சுப, பாவ, சம நிலை ? 
2. நக்ஷத்திரப் பொருத்தம்.
3. செவ்வாய் தோஷப் பொருத்தம்
4. நாக தோஷம் . 
5. லக்னப் பொருத்தம்/ லக்னாதிபதிப் பொருத்தம்;
6. ராசிப் பொருத்தம் / ராசியாதிபதிப் பொருத்தம்
7. ஆயுள் பொருத்தம் / நாடிப் பொருத்தம்
8. புத்திரபாவப் பொருத்தம்
9. கூட்டு கிரகப் பொருத்தம்
10. களத்திர தோஷம்/ ஷஷ்டாஷ்டகம் /  பஞ்சநவமம்
11. உறவுப் பொருத்தம் /  விதிவழிப் பொருத்தம் 
12. தசா சந்திப்பு

 
திருமணப் பொருத்தத்தை கீழ்கண்ட முறையிலும் பார்க்கலாம்.
1. நக்ஷத்திரப் பொருத்தம்
2. செவ்வாய் தோஷம்
3. தசா சந்திப்பு
4. பாவ சாம்யம் (தோஷ சாம்யம்)

இந்த 4 வகை பொருத்தங்களும் கட்டாயம் பார்க்கவேண்டும். இவை திருப்திகரமாக அமைந்தால் மட்டுமே விவாகம் செய்யலாம். இந்த 4ல் ஏதாவது ஒன்று சரியாக பொருந்தாது போனால் திருமணம் செய்யக் கூடாது, மேலும் இந்த முறையில் துல்லியமாகவும், சீக்கிரமாகவும், குறைந்த செலவிலும் முடிவைத் தெரிந்து கொள்ளலாம். திருமணப்பொருத்தம் பார்ப்பதில் உள்ள விபரங்கள் பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. 
ஆகையால் நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷம், தசாசந்திப்பு, பாவசாம்யம் (தோஷசாம்யம்), நாகதோஷம் /  காலசர்ப்ப தோஷம்

 

பிறந்த நட்சத்திரம்
சந்திராஷ்டம நட்சத்திரம்
அஸ்வினி
அணுஷம்
பரணி
கேட்டை
கிருத்திகை
மூலம்
ரோகினி
பூராடம்
மிருகசீரிஷம்
உத்திராடம்
திருவாதிரை
திருவோணம்
புனர்பூசம்
அவிட்டம்
பூசம்
சதயம்
ஆயில்யம்
பூரட்டாதி
மகம்
உத்திரட்டாதி
பூரம்
ரேவதி
உத்திரம்
அஸ்வினி
அஸ்தம்
பரணி
சித்திரை
கிருத்திகை
சுவாதி
ரோகினி
விசாகம்
மிருகசீரிஷம்
அணுஷம்
திருவாதிரை
கேட்டை
புனர்பூசம்
மூலம்
பூசம்
பூராடம்
ஆயில்யம்
உத்திராடம்
மகம்
திருவோணம்
பூரம்
அவிட்டம்
உத்திரம்
சதயம்
அஸ்தம்
பூரட்டாதி
சித்திரை
உத்திரட்டாதி
சுவாதி
ரேவதி
விசாகம்
 

.சந்திரன் நாம் பிறந்த ராசியில்
(1)-இல் இருக்கும்பொழுது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும், ஞாபக மறதி உண்டாகலாம்.
2- இல் இருக்கும் பொழுது: பணவரவுக்கு வாய்ப்புண்டு, பேச்சில் நளினம் இருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வளம் மிகும்.   
3- இல் இருக்கும் பொழுது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள்.
4- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய் வழி ஆதரவு.
5- இல் இருக்கும் பொழுது: ஆன்மீக பயன்கள், தெய்வபக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம், தாய் மாமன் ஆதரவு.
6- இல் இருக்கும் பொழுது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன், வீண் விரயங்கள், மறதி, நஷ்டங்கள்.
7- இல் இருக்கும் பொழுது: காதல் நலிந்கங்கள், பயணங்கள்,சுற்றுலாக்கள், குதூகலம், பெண்களால் லாபம், மகிழ்ச்சி.
8- இல் இருக்கும் பொழுது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்றுசொல்லுகின்றோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளுதல், கோவிலுக்கு சென்று வருதல் நல்லது. 
9- இல் இருக்கும் பொழுது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.
10- இல் இருக்கும் பொழுது: பயணங்கள், நிறை-குறைகள், பணவரவு,அலைச்சல், உடல் உபாதைகள்.
11- இல் இருக்கும் பொழுது: தொட்டது துலங்கும், பொருள்சேர்க்கை,மூத்த சகோதரரால் உதவி, மன அமைதி, தரும சிந்தனை. 
12- இல் இருக்கும் பொழுது: வீண் வியங்கள், டென்ஷன், மறதி,கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

தகுந்த வரன் தேடுவதில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை.

1. ஜாதி,மதம்,குலம்,கோத்திரம்,உட்பிரிவு,

2. வரன் இருக்கும் ஊர், பூர்வீகம், குடும்ப அந்தஸ்து

3. வயது வித்தியாசம்

4. பெண் அல்லது பையனின் படிப்புக்கு தகுந்தபடி ஜாதகம் எடுப்பது.

5. அரசாங்க வேலையா, தனியார் கம்பெனியா, நிரந்தர வேலையா ?

6. சொந்த பிஸிநெஸ் அல்லது வியாபாரமா ?

7. போதிய வருமானமும், வசதியும் இருக்கிறதா ?

8. வரனின் குணாதிசயங்களை விசாரிப்பது

9. தனது மகள் அல்லது மகனுக்கு ஏற்ற வரனா ?

10.உயரம், நிறம், அழகு. உடல் வாகு ஒத்துவருமா ?

11.நோய், நொடி ஊனம், இல்லாத வரனா ?

12.பெண் அல்லது பையனின் பிறந்த நக்ஷத்திரத்துக்கு பொருந்தக்கூடிய ஜாதகங்களை எடுப்பது

முக்கியமான பத்துப் பொருத்தம்
1. நட்சத்திரப்-பொருத்தம், 2. கணப்-பொருத்தம், 3. மகேந்திரப்-பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம், 5. யோனிப்-பொருத்தம், 6. ராசிப்-பொருத்தம், 7. ராசி அதிபதிப்-பொருத்தம், 8. வஸ்யப்-பொருத்தம், 9. ரச்சுப்-பொருத்தம், 10. வேதைப்-பொருத்தம்

 

1. நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி) 
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.
பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த அமைப்பில்  இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.
ஜன்ம நட்சத்திரம் முதல்:

10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசி எனில்  நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்
ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.
பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம். 
ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.
ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால்; திருவாதிரைக்கு - உத்திரமும், பூரத்திற்கு - அனுஷமும்; பூசத்திற்கு - சித்திரையும்; புனர்பூசத்திற்கு - ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு - ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம். கெடுதல் இல்லை.
உத்தராடத்திற்கு - ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு - பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.
ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.
சதயம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8 ம் ஏக ராசிகளாகில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2. கணப்பொருத்தம்:
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.
இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை  ராட்சத கணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது. 
ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.

3. மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.
4. ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.
பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

 

5. யோனிப் பொருத்தம்:

(தம்பதிகளின் அன்யோன்ய நட்பு - மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு.
இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில்  ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:குதிரை - எருமை; யானை - சிங்கம்; குரங்கு=ஆடு; பாம்பு =கீரி; மான்-நாய்; எலி - பூனை; மாடு - புலி; பெருச்சாளி - பூனை.

 

6. ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்
பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். ரிஷபம்  முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.

 

7. ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி) 
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும்.

இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள். இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் - பொருந்தாது.
 

8. வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் - இணைபிரியா அன்பு) 
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.
பெண் ராசி :  ஆண் ராசி 
மேஷம்  : சிம்மம் , விருச்சிகம்
ரிஷபம் :  கடகம், துலாம்
மிதுனம் :  கன்னி
கடகம் :  விருட்சிகம், தனுசு
சிம்மம் :  மகரம்
கன்னி :  ரிஷபம், மீனம்
துலாம் : மகரம்
விருச்சிகம் :  கடகம், கன்னி
தனுசு : மீனம்
மகரம்  : கும்பம்
கும்பம்  : மீனம்
மீனம்  : மகரம் 

 

9. ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கலியாய்  இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.
கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.
சிரோ ரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபி ரச்சு (உதரம்) :  கிருத்திகை , புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊரு ரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாத ரச்சு (பாதம்): அஸ்வினி, ஆயில்யம்,  மகம், கேட்டை, மூலம், ரேவதி
ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம். 
ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.
சிரோ ரச்சு: புருஷன் மரணம் 
கண்ட ரச்சு: பெண் மரணம்
நாபி ரச்சு: புத்திர தோஷம்
ஊரு ரச்சு: பண நஷ்டம்
பாத ரச்சு: பிரயாணத்தில் தீமை

 

10. வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.
வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.


அஸ்வினி - கேட்டை
பரணி - அனுஷம்
கார்த்திகை - விசாகம்
ரோகினி - சுவாதி
திருவாதிரை - திருவோணம்
புனர்பூசம் - உத்திராடம்
பூசம் - பூராடம்
ஆயிலியம் - மூலம்
மகம் - ரேவதி 
பூரம் - உத்தராட்டாதி
உத்திரம் - பூரட்டாதி
அஸ்தம் - சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்க வேண்டும்

ஆயில்யத்தில்பிறந்தபெண்ஜாதகத்தைப்பற்றி

ஆயில்யம் கடக ராசியில் உள்ளது. கடகம் சந்திரனின் வீடு. சந்திரன் தாய்க்கு காரகர். லக்கினத்திற்கு 10ம் வீடு மாமியார் வீடு. ஆயில்ய நக்ஷத்திரத்தின் அதிபதி புதன். மாமியாருடைய 10வது வீட்டில், அல்லது 4ம் இடத்தில் இந்த புதன், ராகு அல்லது கேது அல்லது செவ்வாயுடன் காணப்பட்டால், திருமணம் முடிந்த பிறகு மாமியாருக்கு உடல் நலத்தில் ஒரு சிறிய பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. ஆனால் 10ம் வீடு அல்லது 4ம் வீட்டில புதன் தனியாக நின்றாலோ, வேறு கிரகங்கள் இருந்தாலோ, மாமியாருக்கு தோஷம் நேராது. மேலும் புதன ஆட்சி அல்லது உச்சம் பெற்று ; சுக்கிரனின் சாரம் பெற்று இருந்தாலும் ஆயில்யத்தால் மாமியாருக்கு கெடுதல் ஏற்படாது.

இந்த உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. பல ஜோசியர்களுக்கும் கூட தெரியாமல் இருக்கலாம். ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது எதற்கு ஆயில்யம் என்று ஒதுங்கிவிடுகிறோம். நமது குடும்பத்தில் ஆயில்யத்தில் பிறந்த ஒருவர் இருந்தால் என்ன செய்வோம்? ஆயில்யத்தில் பிறந்த பெண் ஜாதகத்தில் 10மிடம், 4மிடம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஆண் ஜாதகத்தை பார்க்க வேண்டிய அவசிய்ம் இல்லை. உங்களால் ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கை அமைந்தால் கோடி புண்ணியம். அதை இழந்து விடாதீர்கள்.

.

நன்றி  அன்புடன்

S.மேகநாதன் , M.Com, D.A A.D.A, TALI METHOD ASTRO

.

Login form
TIME
NASA
calendar
«  July 2024  »
SuMoTuWeThFrSa
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2024
Make a free website with uCoz