Saturday, 05.23.2026, 9:29 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்:



மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத்துடன், நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய ஜாதி சிகப்பு பவளத்துடன் நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவிற்குரிய கனக புஷ்ப ராகத்தை நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய, நோய் கட்டுக்குள் வரும்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்தையும் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள்; வரும்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சனிக்குரிய நீலத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான குருவுக்கு உரிய கனக புஷபராகத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான செவ்வாய்க்குரிய சிகப்பு பவளத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சுக்கிரனுக்குரிய வைரத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன்; இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான புதனுக்குரிய மரகதத்தை நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சந்திரனுக்குரிய ஜாதி முத்துவை, நோய் தந்த கிரகத்திற்கு உரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் ரோகாதிபதியான சூரியனுக்குரிய மாணிக்கத்தை, நோய் தந்த கிரகத்திற்குரிய ரத்தினத்துடன் இணைத்து, இடது கை மோதிர விரலில் அணிய நோய் கட்டுக்குள் வரும். கிரகங்களும் - அவற்றை சாந்திசெய்யும் நவரத்தின கற்களும்:

சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - ஜாதி முத்து
செவ்வாய் - சிகப்பு பவளம்
புதன் - மரகதம்
குரு - கனக புஷபராகம்
சுக்கிரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூரியம்


இரண்டு ரத்தினங்களை இணைக்கும் போது, அவைகளுக்குள் பேதை ஏற்படுமானால், நடுவில் ஏதேனும் சாதாரண கல்லினை வைக்க வேண்டும். மோதிரம் அடியில் திறப்புடன் ஓபன்- செட்டிங் முறையில் அமைக்கப்பட வேண்டும். நோயின் தாக்கம் தீர்ந்தவுடன், மோதிரத்தை எடுத்துவிட வேண்டும். மேலே குறிப்பிட்டவை பொதுவானது ஆகும்.

தனிப்பட்ட ஜாதகங் களில், கிரகங்களின் நிலையை ஆராய்ந்து, நவரத்தினங்களை உரிய முறையில் அணிந்து, நன்மைகளைப் பெறலாம். எண் கணிதம் கொஞ்சம் தெரிந்து கொள்வதும் , ஒரு நல்ல ஜோதிடருக்கு அழகு. எந்த வகையில் எண் கணித ஞானம் வேண்டும் என்பதை மூன்றாம் எண்ணை , குரு பகவானை , ராசி கற்களை உதாரணமாக  வைத்து இன்று பார்க்கலாம். மஞ்சள் நிறமுடைய புஷ்பராகக்கல் , மூன்றாம் எண் குருவிற்கு உரியது.

Login form
TIME
NASA
calendar
«  May 2026  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2026
Make a free website with uCoz