Thursday, 10.02.2025, 8:17 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

நவகிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் :

கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள் :

நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற் பலன்கள் பெற்றும் வாழலாம். மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற் பலன்கள் பெற்று வாழலாம்.

 

சூரியன் :

கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.

 

சந்திரன் :

தயிரை முதலில் உடல் முழுதும் தேய்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும். இது சிறந்த பரிகாரம்.

 

செவ்வாய் :

வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.

 

புதன் :

மஞ்சள்கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.

 

வியாழன் :

கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.

 

சுக்கிரன் :

பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும் அதனால் சுக்கிரன் பகவானால் உண்டான கெடு பலன்கள் குறையும்.

 

சனி :

கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும் அதனால் சனி பகவானால் உண்டான கெடு பலன்கள் குறையும்.

 

ராகு :

மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும் அதனால் ராகு பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

 

கேது :

அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும் அதனால் கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

Login form
TIME
NASA
calendar
«  October 2025  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz