Saturday, 05.23.2026, 10:03 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

தென் தமிழகத்தில் நவக்கிரகங்கள்

 

 

 

 தென் தமிழகத்தில் நவக்கிரகங்கள் சிவபெருமானின் அம்சமாக கோயில் கொண்டுள்ளன.
சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.  
அகத்திய முனிவரின் சீடரான உரோமச  முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார்
1. பாபநாசம்  2. சேரன்மாதேவி   3. கோடகநல்லூர்  4. குன்னத்தூர்  5. முறப்பாடு  6. ஸ்ரீ வைகுண்டம்  7. தென் திருப்பேரை  8. இராஜபதி  9. சேர்ந்த பூமங்கலம்  

         பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.

  சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

 

 கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.
 

 குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில்
 

முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.
 

ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும். 

தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில்

கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.

சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில்

பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

 

Login form
TIME
NASA
calendar
«  May 2026  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2026
Make a free website with uCoz