அயனாம்சம் கணிக்க சூத்திரம் ,
சாலிவாகன சகாப்தத்தின் வருஷத்தில் 421ஐ கழித்து 3 ஆல் பெருக்கி வந்த தொகையை 200 ஆல் வகுத்து வந்த பாகை, கலை, விகலை, அயனாம்சம் ஆகும்
இதற்கு உதாரணமாக மன்மத வருஷத்துக்குண்டான அயனாம்சம் கணிப்போம்
(2015 - 2016)
சாலிவாகன சகாப்தம் 1937
இதில். 421ஐ கழிக்க. (1937 – 421 = 1516 )
1516 இதை (1516 * 3 = 4548 )
3ஆல் பெருக்க
4548 இதை 200ஆல் வகுக்க
ஈவு 22 மீதி 148 (148 * 60 = 8880 )
மீதியை 60 ஆல் பெருக்க 8880 இதை 200 ஆல் வகுக்க ஈவு 44 மீதி 80
இந்த மீதியை 60ஆல் பெருக்க 4800
இதை 200ஆல் வகுக்க ஈவு 24
ஆக மன்மத வருஷத்துக்குண்டான அயனாம்சம் 22 பாகை 44 கலை 24 விகலை
(சூரிய சித்தாந்தம் )