Saturday, 05.23.2026, 10:03 PM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

பணக்கஷ்டம் தீர சொர்ணாகர்ஷண ஸ்ரீபைரவ வழிபாடு

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒருநாள்சொர்ணாகர்ஷண ஸ்ரீபைரவ  வழிபாடு        

 

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;

 தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில்  மனமுருகி  வேண்டி.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீசொர்ணா பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது .

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீசொர்ண பைரவர் ஆலயங்கள்                   

1அண்ணாமலை கோவிலின்   உள்பிரகாரத்தில்.

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்12 கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம் (கிராமம் பெரியகுளம்)

3.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம். 

4.சிதம்பரம்.

5.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை.

6.திருச்சி  மார்கட் அருகில் இருக்கும் பஜார்சாலை.

7.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலயம்

8.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி (கொங்கணரின் ஜீவசமாதி இது)

9.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி (சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

10.ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,

புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.

11.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்.

12.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை.

13.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்.

14. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம், துறையூர்.

15.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.

16.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் நங்கநல்லூர்,சென்னை.

17.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் ரோடு ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர். D.T

18.சீர்காழியில் ஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று

தேய்பிறை அஷ்டமி வரும் நாள்.16.09.2014, 16.10.2014, 15.11.2014, 14.12.2014, 13.01.2015, 12.02.2015, 14.03.2015, 12.04.2015 . இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் மனப்பூர்வமாக வேண்டி வழிபாடு முடிந்ததும் வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.

 

Login form
TIME
NASA
calendar
«  May 2026  »
SuMoTuWeThFrSa
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2026
Make a free website with uCoz