Thursday, 10.02.2025, 6:40 AM
Welcome Guest | RSS

ஸ்ரீ முருகா ஜோதிடம் , முசிறி .S.மேகநாதன்

sitemenus
Live Gold
WEB
sports

     

                                 ஜோதிடம் எனும் சாஸ்திரம் வேத சாஸ்திரத்தின் ஓர் அங்கம். நட்சத்திரத்திலிருந்து வரும் ஆற்றல் கிரகத்தினால் பிரதிபலிக்கப்பட்டு நமது தாய் கிரகமான பூமிக்கும் எதிரொளிக்கப்படுகிறது.நட்சத்திரம் இல்லாமல் கிரகங்களும், கிரகங்கள் இல்லாமல் நட்சத்திரமும், பூமிக்கு ஆற்றலை வழங்க முடியாது. இரண்டு விஷயங்களும் இணைந்து செயலாற்ற வேண்டும். வானவியல் என்பது ஓர் விஞ்ஞான சித்தாந்தம். கிரகங்கள், நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளி பற்றி ஆராயும் சித்தாந்தம்.... சூரிய மண்டலத்தில் உள்ள வானவியல் கிரகங்கள்
1) சூரியன் 2) புதன் 3) சுக்கிரன் 4) பூமி 5) செவ்வாய் 6) குரு 7) சனி 8) யூரைனெஸ் 9 ) நெப்டியுன் 10) ப்ளூட்டோ.  இதில் சூரியன் என்பது ஓர் நட்சத்திரம், மற்றவை அனைத்தும் கிரகம். இதில் ப்ளூட்டோ என்பது தற்சமயம் கிரகம் அல்ல. ஜோதிட ரீதியான 
1) சூரியன் 2) சந்திரன் 3) செவ்வாய் 4) புதன் 5) குரு 6) சுக்கிரன் 7) சனி 8) ராகு 9) கேது   ஒன்பது   கிரகங்கள் மட்டுமே

       ஜோதிட ரீதியான கிரகங்கள் ஞாயிறு முதல் சனி கிழமை வரை மனதில் வரிசையாக சொல்லி அத்துடன் ராகு / கேதுவை இணைத்து கொண்டால் போதுமானது .உலகத் தோற்றத்திற்குக் காரணமாய பஞ்ச பூதங்கள்  தோற்றுவிக்கின்றது.  இது வருங்காலம், நிகழ்காலம், சென்றகாலம், எனும் மூன்று வகையாக இருக்கின்றது.  இதுவை அயன், மால், சிவன், என்று கூறப்படும்.  ஆகையால்தான் திரிமூற்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். அயன், மால், சிவன், என்பது காலத்தின் ஆக்கல், இருத்தல், அழித்தல். என்னும், முத்தொழில்களின் பெயராகும். மேலும் காலமானது வருடங்க ளாகவும்,அயனங்களாகவும்,ருதுக்களாகவும்,மாதங்களாகவும்,பட்சங்களாகவும், நாட்களாகவும், பரிணமித்து இருக்கின்றது. ராசி மண்டலத்தின் பகுதி அதற்கென ஓர் பெயரும் கிரக ஆதிக்கமும் கொண்டு அமைக்கபட்டுள்ளது

வான் மண்டலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதன் செயல்களும் வட்டத்தின் அடிப்படையாகவே இருக்கிறது. வட்டத்தின் சுற்றலவு 360 டிகிரி.வட்டத்தை இரண்டாக பிரித்தால். இரண்டு 180 டிகிரியாக மாறும்.

         பன்னிரெண்டு பிரிவான 30 டிகிரியை ஓர் அடிப்படைகொண்டு ஜோதிடத்தில் ஆய்வு செய்கிறார்கள். இந்த பன்னிரெண்டு பிரிவகளே ராசிகள் என அழைக்கப்படுகிறது.ராசி மண்டலம் என்பது வட்டவடிவம் தான், நமது செளகரியத்திற்காக சதுரத்தில் அமைந்திருக்கிறது.ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கும் போது உத்தராயனம்  தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.

              தைமாதம் தொடங்கி ஆனி முடிய  6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம், க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம். ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது  நல்லது.

        நமது பாரதநாட்டிற்கு சுதந்திரம் தருவதற்கு முன், ஜோதிடத்தை பொய் எனக்கூறும் நாடு இங்கிலாந்து  மவுண்ட்பேட்டன் நாட்டின் பிரபல ஜோதிடர்களை அழைத்தான்.ஒரு குழந்தை பிறந்து 50 வருடங்கள் வரை போராட்டமாகவே வாழவேண்டும் எனில் அந்த குழந்தை எந்த நேரங்களில் பிறக்கும்? என கேட்டான். அவர்கள் குறிப்பிட்டுத்தந்த நேரங்களில் மிகவும் மோசமான நேரம் 14.8.1947 நள்ளிரவு 11.45 ஆகும்.அந்த நேரத்தில் தான் அவன் நமது நாட்டிற்கு சுதந்திரம் தந்தான்.யோசியுங்கள்.ஜோதிடத்தை பொய் எனக்கூறும் நாடு இங்கிலாந்து. நமது நாடு ஜோதிடத்தைக் கண்டுபிடித்த நாடு.நமது மரபுச்செல்வத்தைக் கொண்டே நமது கண்ணைக் குத்திவிட்டான்.

வேதத்தின் கண் என்று அழைக்கப்படும்  ஜோதிடம் எனும் சாஸ்திரத்தை என் குருநாதர் கருவூர் ஜோதிடர் சந்தானம் ஆசிரியர், கருவூர் ஜோதிடர் ஆசிரியர், R.சுந்தர ராஜன், M.A ASTRO, D.A ( ASTRO), A.D.A, ( ASTRO),   திருச்சி ஜோதிடர் K.S. சுந்தர ராஜன் TALI (METHOD) அவர்கள் உதவி கொண்டும், திருச்செந்தூர் முருகன்துணை கொண்டும் என் குலதெய்வம் தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் துணைகொண்டும் ஜோதிடத்தைக் பயின்று  வருகிறேன்

உங்கள் ஜோதிட அறிவு பெருக எனது வாழ்த்துக்கள்

S.மேகநாதன் ,M.Com, M.A ASTRO, D.A ,A.D.A, TALI METHOD ASTRO, MUSIRI, PIN. 621211,

CELL. 9245405269,9786531951

 

 

Login form
TIME
NASA
calendar
«  October 2025  »
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031
calculator
BBC
YA HOONews

Copyright MyCorp © 2025
Make a free website with uCoz